நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

STR பெறுநர்கள் தனியார் கிளினிக்குகளில் இலவசச் சிகிச்சை பெறலாம்

கோலாலம்பூர்: 

தனியார் கிளினிக்குகளில் இலவசச் சிகிச்சைக்கு அரசு உதவிப் புரிகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

பி40 பிரிவைச் சேர்ந்த STR உதவித் தொகை பெறுநர்கள் தனியார் கிளினிக்குகளில் இலவசச் சிகிச்சை பெறலாம். 

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம்  தேதி முதல் மடானி மருத்துவத் திட்டத்தின் வழி மலேசியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் கிளினிக்குகளில் STR உதவித் தொகை பெறுநர்கள் இலவச சிகிச்சை பெறலாம். 

தற்போது, ​​நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பகுதிகளிலுள்ள தனியார் கிளினிக்குகளில்  STR உதவித் தொகை பெறுநர்கள் இலவசச் சிகிச்சை பெறலாம். 

ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஜோகூர்பாரு, கூட்டரசுப் பிரதேசம் கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள கிள்ளான், பெட்டாலிங், உலுலங்காட், கோம்பாக், பேராக்கில் கிந்தா, பினாங்கில் தீமோர் லாவுட், சரவாக்கில் கூச்சிங், சபாவில் கோத்தா கினபாலு ஆகிய 10 மாவட்டங்கள் இத்திட்டத்தில் இடம்பெற்றன.

மருத்துவருக்கான கட்டணம், பரிசோதனைகள், மருந்துகள் ஆகியவற்றுக்கு  STR உதவித் தொகை பெறுநர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தனியார் கிளினிக்குகளில் சிகிச்சை பெறும் ஒரு குடும்பத்திற்கு 250 ரிங்கிட், தனித்து வாழும் மூத்தக் குடிகளுக்கு  125 ரிங்கிட். திருமணம் ஆகாதவர்களுக்கு 75 ரிங்கிட் என அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 

இந்தச் சலுகை ஓர் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

protecthealth அகப்பக்கத்தில் STR உதவித் தொகை பெறுநர்கள் தங்களது தகுதியைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset