
செய்திகள் மலேசியா
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆடவரின் சடலம்; போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்: டத்தோ குமார்
ஜொகூர்பாரு:
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆடவரின் சடலம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
இஸ்கந்தர் புத்ரி கெலாங் பாத்தாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.
அதே வேளையில் நேற்று அதிகாலை சுல்தானா அமினா மருத்துவமனையில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆக இவ்விரு சம்பவங்கம் குறித்தும் போலிசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
நேற்று அதிகாலை 1.40 மணியளவில், உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருந்த ஒருவரின் உடல், எந்த அடையாள ஆவணங்களும் இல்லாமல் மருத்துவமனையில் கைவிடப்பட்டது குறித்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இறந்தவர் கறுப்பு நிற காரைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்களால் கைவிடப்பட்டுள்ளார்.
இறந்தவரின் கைரேகை சோதனையில் அவர் கெடாவின் சுங்கை பட்டாணியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது.
42 வயதுடைய இந்தியரான அவருக்கு நான்கு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதும் தெரிய வந்தது.
மருத்துவ அதிகாரிகள் நடத்திய பிரேத பரிசோதனையில் மார்பு, வயிற்றில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது.
சம்பவத்திற்கு முன்பு நள்ளிரவு சுமார் 12.12 மணியளவில் கெலாங் பாத்தாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கொள்ளையால் தூண்டப்பட்டதாக நம்பப்படும் தாக்குதல் நடந்ததாக ஆரம்ப விசாரணைகள் கண்டறிந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 12:03 am
அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை மேம்படுத்தப்படும்: சைபுடின் நசுதியோன்
July 4, 2025, 10:45 pm
முன்மொழியப்பட்ட கார்பன் வரி முதலீட்டாளர்களுக்கு ஒரு தடையல்ல: பிரதமர்
July 4, 2025, 5:54 pm
சோலார் வழக்கில் ரோஸ்மாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தீர்ப்பு
July 4, 2025, 5:49 pm
சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியில் இருந்து விலகும் திட்டம் இல்லை: ஸ்டார் கட்சி திட்டவட்டம்
July 4, 2025, 5:24 pm
KLIA ஏரோ இரயில் பழுதடையவில்லை: மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விளக்கம்
July 4, 2025, 5:20 pm