நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சோலார் வழக்கில் ரோஸ்மாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தீர்ப்பு

கோலாலம்பூர்:

சோலார் வழக்கு விசாரணையில் நீதிபதியை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பம் தொடர்பான ரோஸ்மாவின் மேல்முறையீட்டின் மீதான தீர்ப்பு செப்டம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படும்.

சரவாக்கில் 1.25 பில்லியன் ரிங்கிட் சோலார் திட்ட ஊழல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் வழக்கை ஒத்திவைக்கக் கோரி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டின் மீதான முடிவுக்கான தேதியை செப்டம்பர் 10 என மேல்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்ற துணைப் பதிவாளர் முஹம்மது நூர் ஃபிர்தௌஸ் ரோஸ்லி இன்று வழக்கு நிர்வாகத்தின் போது தேதியை நிர்ணயித்தார்.

கடந்த ஜூன் 25 அன்று டத்தோ அஹமது ஜைதி இப்ராஹிம், டத்தோ அஸ்மான் அப்துல்லா, டத்தோ நூரின் பதருதீன் ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் குழு, அரசு தரப்பு மற்றும் பிரதிவாதிகளின் சமர்ப்பிப்புகளைக் கேட்ட பிறகு முடிவை ஒத்திவைத்தது.

ரோஸ்மாவின் வழக்கறிஞர் டத்தோ அக்பர்டின் அப்துல் காதரை தொடர்பு கொண்டபோது இதனை உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset