நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண்ணியம் போற்றும் மகளிர் அரங்கம் போன்ற பெண்களை முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்: சரஸ்வதி கந்தசாமி

புத்ராஜெயா:

பெண்ணியம் போற்றும் மகளிர் அரங்கம் போன்ற பெண்களை முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இதனை வலியுறுத்தினார்.

மலேசிய இந்து சங்கத்திற்கு துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இன்று மானியம் வழங்கினார்.

புத்ராஜெயாவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சங்கத்தின் தேசிய தலைவர் தங்க கணேசன், தேசிய பொருளாளர் பெருமாள் ராமன் ஆகியோரிடம் மானியத்திற்கான காசோலையை அவர் வழங்கினார்.

அண்மையில் இச் சங்கத்தின் ஏற்பட்டில் நடத்தப்பட்ட பெண்ணியம் போற்றும் மகளிர் அரங்கம் நிகழ்ச்சியில் துணையமைச்சர் சரஸ்வதி கலந்து கொண்டு பேராதரவு வழங்கினார்.

அதோடு தமது உரையில் பெண்கள் மேம்பாடு குறித்து அவர் சிறப்பாக பேசியிருந்தார். பெண்களை முன் நிலைப்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

அந்நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் தாம் மானியம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியையும் துணையமைச்சர் சரஸ்வதி நிறைவேற்றியுள்ளார்.

மலேசிய இந்து சங்கத்திற்கு சிறப்பான ஆதரவை வழங்கி வரும் செனட்டர் சரஸ்வதிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக தங்க கணேசன் கூறினார்.

மேலும், ஆலயங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு அவர் பெரும் ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்.

இதன் தொடர்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் முன்னொடுக்கப்பட்ட 12 தீர்மானங்களில் மிக முக்கியமான 8 தீர்மானங்களை நேரடியாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றுள்ளார்.

இந்திய சமுதாயத்தின் மீதும் அது சார்ந்த பிரச்சினைகள் மீதும் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு வரும் செனட்டர் சரஸ்வதிக்கு இந்து சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தங்க கணேசன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset