நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நியூஸிலாந்துக்கு ஒரு ஆப்பிளை கடத்தியதாக உம்மி ஐடாவுக்கு 1,000 ரிங்கிட் அபராதம்

ஆக்லாந்து:

ஒரு ஆப்பிளை கடத்தியதாக கூறி நியூசிலாந்து அதிகாரிகள்  டத்தின்ஶ்ரீ உம்மி ஐடாவுக்கு 1,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான அபராதம் விதித்தனர்.

சமீபத்தில் ஆக்லாந்து விமான நிலையத்திற்கு வந்தபோது, ​​ தனது பையில் ஒரு அறிவிக்கப்படாத ஆப்பிள் இருந்ததற்காக உம்மி ஐடாவுக்கு இந்த அபராதம் விதித்தது.

51 வயதான உம்மி, தனது பையில் வைத்திருந்த ஆப்பிள் குடியேற்ற அதிகாரிகளால் ஸ்கேனரால் கண்டறியப்பட்டது.

இதை அடுத்து அங்குள்ள அதிகாரிகள்  அவருக்கு தோராயமாக 1,024 ரிங்கிட் அபராதம் விதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உம்மி, தனது தவறை ஒப்புக்கொண்டு, அந்த அனுபவத்தை எதிர்பாராத விதியின் திருப்பம் என்று விவரித்தார்.

குடிநுழைவுத் துறை விஷயங்களை எளிதாக்க வேண்டும் என்பதற்காக நான் நியூசிலாந்திற்கு உணவைக் கொண்டு வரவில்லை.

இருப்பினும் நான் மலேசியா ஏர்லைன்ஸ் லவுஞ்சில் இருந்த போது ​​நான் மிகவும் சோர்வாக இருந்ததால், விமானத்தில் அதை சாப்பிடும் நோக்கத்துடன் ஒரு ஆப்பிளை எடுத்து வந்தேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset