நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை மேம்படுத்தப்படும்: சைபுடின் நசுதியோன்

கோல பெசுட்:

அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை மேம்படுத்தப்படும்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

அமலாக்க முகமை நேர்மை ஆணையம் (இஏஐசி) நேற்று பல பரிந்துரைகளை வெளிப்படுத்தி உள்ளது.

இதன் அடிப்படையில் தேசியப் பதிவு இலாகாவின் வாயிலாக அடையாள அட்டை விண்ணப்ப செயல்முறையை மேம்படுத்த உள்துறை அமைச்சு தயாராக உள்ளது.

இஏஐசி வெளிப்பாடுகளை உள்துறை அமைச்சு முழுமையாக மதிக்கிறது.

அதே வேளையில் அமைச்சும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் அதாவது மக்களின் வசதிக்கே முன்னுரிமை அளிக்கிறது.

மேலும் பலரின் விண்ணப்பங்கள் தோல்வியடைந்த அல்லது ஆவணங்கள் போலியானவை என்பதால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன என்பதையும் நான் குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக ஒரு மகப்பேறு மருத்துவமனையில் உண்மையான பிறப்பு செயல்முறைகள் ஏதும் நடைபெற்றிருக்காது.

ஆனால் அம் மருத்துவமனைகள் பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக தேசிய பதிவு இலாகா உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset