நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் சம்பவம் குறித்து சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் சிறப்பு விளக்கவுரை வழங்கப்படும்: அமிரூடின் ஷாரி

ஷாஆலம்:

புத்ரா ஹைட்ஸ் சம்பவம் குறித்து சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் சிறப்பு விளக்கவுரை வழங்கப்படும்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

சுபாங் புத்ரா ஹைட்ஸில் நடந்த நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு பெரும் பாதிப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்பவம் குறித்து வரும் திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் மாநில சட்டமனறக் கூட்டத்தில் சிறப்பு விளக்கவுரை வழங்கப்படும்.

அரசாங்க அல்லது எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த விளக்கவுரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை தெளிவுபடுத்தவும் விளக்கவும் அரசாங்கத்திற்கு இடம் அளிக்குமாறு சட்டமன்ற சபாநாயகரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

மாநில அரசு வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் கொள்கைகளில் நிற்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது என்று டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset