நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குவாக் ஹுலுவில் கேபள் கார் சேவையா? மாவட்ட அதிகாரி விளக்கம்

பாலிங்: 

பேராக்கில் உள்ள பெங்கலன் ஹுலுவையும் கெடாவில் உள்ள பாலிங்கையும் இணைக்கும் கேபிள் கார் சேவை இருப்பதாகக் கூறும் காணொலி போலியானது என்று பாலிங் மாவட்ட அதிகாரி  Yazlan Sunardie Che Yahaya தெரிவித்தார்.

பொது மக்கள் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் உருவாக்கப்படும் இத்தகைய காணொலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக, பேராக், குவாக் ஹுலுவில் இல்லாத கேபிள் கார் சேவையை விளம்பரப்படுத்திய காணொலியை நம்பி அங்குச் சென்ற தம்பதி ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து @dyaaaaaaa._ என்ற Threads பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அக்காணொலியை நம்பி கோலாலம்பூரிலிருந்து அப்பகுதிக்கு ஒரு வயதான தம்பதியினர் வந்துள்ளனர். 

தங்கும் விடுதியில் தங்கியிருந்த அத்தம்பதியினர் தன்னை அணுகி கேபிள் கார் சேவை குறித்துக் கேட்ட போது தாம் அதிர்ச்சியடைந்ததாக Threads பயனர் தெரிவித்தார். 

குவாக் ஹுலுவிலுள்ள கேபள் காரில் பயணம் செய்துள்ளீர்களா என்று அத்தம்பதி கேட்ட போது முதலில் அவர்கள் நகைச்சுவை செய்வதாக பயனர் கூறியுள்ளார். 

அதன் பின் இதற்காக கோலாலம்பூரிலிருந்து தாங்கள் வந்தததாக அத்தம்பதி கூறியதைக் கேட்டு தாம் திகைத்துப் போனதாக அவர் தெரிவித்தார்.

பின்னர், குவாக் ஹுலுவில் அத்தகைய இடம் இல்லையென்றும், அவர்கள் பார்த்த காணொலி போலியானது என்றும் பயனர் தம்பதியிடம் கூறியுள்ளார். 

இருப்பினும், அத்தம்பதி அக்காணொலியில் நிருபர் கூட இருந்ததால் அது நிச்சயமாக போலியாக இருக்க முடியாது என்று கூறியுள்ளனர். 

பலமுறை அவர்களுக்கு எடுத்துரைத்தப் பின் அவர்கள் நிலையைப் புரிந்து கொண்டதாக பயனர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset