
செய்திகள் மலேசியா
சுபாங் ஆலம் எல்ஆர்டி நிலையம்: தண்டவாளத்தில் விழுந்த ஆடவருக்குத் தலையில் பலத்த காயம்
ஷா ஆலம்:
இன்று காலை ஷா ஆலம் செக்ஷன் 27-இல் அமைந்துள்ள சுபாங் ஆலம் எல்ஆர்டி ரயில் நிலையத் தண்டவாளத்தில் விழுந்த 27 வயது ஆடவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காலை 8.07 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்துத் தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையத்திலிருந்து எட்டு பேர் கொண்ட மீட்புக் குழுவை அங்கு விரைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் Ahmad Mukhlis Mokhtar தெரிவித்தார்.
மீட்புக் குழு சென்றடைவதற்குள் பொதுமக்கள் அந்த ஆடவரைத் தண்டவாளத்தில் இருந்து மேலே கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவருக்கு சம்பவ இடத்திலேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதாக Ahmad Mukhlis Mokhtar கூறினார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் ரயில் நிலையத்தின் தண்டவாளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் தவறி விழுந்ததாக ராபிட் ரயில் நிறுவனம் தனது தனி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 5:54 pm
சோலார் வழக்கில் ரோஸ்மாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தீர்ப்பு
July 4, 2025, 5:49 pm
சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியில் இருந்து விலகும் திட்டம் இல்லை: ஸ்டார் கட்சி திட்டவட்டம்
July 4, 2025, 5:24 pm
KLIA ஏரோ இரயில் பழுதடையவில்லை: மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விளக்கம்
July 4, 2025, 5:20 pm
நியூஸிலாந்துக்கு ஒரு ஆப்பிளை கடத்தியதாக உம்மி ஐடாவுக்கு 1,000 ரிங்கிட் அபராதம்
July 4, 2025, 5:09 pm
குவாக் ஹுலுவில் கேபள் கார் சேவையா? மாவட்ட அதிகாரி விளக்கம்
July 4, 2025, 5:04 pm