நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கண் முன்னே மகள் பாலியல் துஷ்பிரயோகம்: தாய் அவரின் காதலன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

அம்பாங்:

கண் முன்னே மகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தாயும் அவரின் காதலன் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு தனது 12 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய அந்த நபரை தூண்டியதாக அவர்கள் மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு நீதிபதி நோர்ஷிலா கமருதின் முன் குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டது.

 61 வயதான நாசி லெமாக் வர்த்தகர் அஸ்மான் ஹாசிம், 37 வயதான பெண் இருவரும் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

கடந்தாண்டு இங்குள்ள தாமான் செராயாவில் உள்ள ஒரு வீட்டில் அப்போது 12 வயதாக இருந்த  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக  அஸ்மான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 (ஜி) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இது அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை,  பிரம்படி தண்டனை விதிக்கப்படும்.

மகளை தனது கண் முன்னே பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பாதுகாவலராக பணிபுரியும் அந்தப் பெண் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 109 இன் கீழ், அதே சட்டத்தின் பிரிவு 375 (ஜி) உடன் சேர்த்துப் படிக்கப்பட்டது.

இது அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி தண்டனைக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset