நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரியான முடிவு எடுப்பது என்பது மிகவும் கடினமானது: நிக் நஸ்மி

கோலாலம்பூர்:

சரியான முடிவு எடுப்பது என்பது மிகவும் கடினமானது என்று செத்தியவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் கூறினார்.

கெஅடிலான் கட்சித் தேர்தலில் தோல்விக் கண்டதை தொடர்ந்து நிக் நஸ்மி இயற்கை வள, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த ராஜினாமா இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் அமைச்சின்  தனது ஊழியர்களுடன் பிரியாவிடை தருணத்தை அவர் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சராக நியமிக்க வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் இந்த அலுவலகத்தில் அமைச்சராக இருக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி.

இங்குள்ளவர்கள் அர்ப்பணிப்பு நிறைந்தவர். இந்த கடினமான தேர்வைப் புரிந்துகொண்டதற்கு நன்றி. சில நேரங்களில் சரியான முடிவு கடினமான முடிவாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset