நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேக்ஸ் 2 நெடுஞ்சாலை ஊழல் வழக்கில் 61 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி

கோத்தாபாரு:

மேக்ஸ் 2 நெடுஞ்சாலை ஊழல் வழக்கில் 61 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.

மேக்ஸ் 2 எனப்படும் மாஜு விரைவுச்சாலை நீட்டிப்புத் திட்டத்திலிருந்து சுகுக் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பில் எம்ஏசிசி துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

இது  தொடர்பான விசாரணைக்கு உதவ இதுவரை மொத்தம் 61 சாட்சிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கிற்கான விசாரணை ஆவணங்களை முடிக்க எனது அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் அவகாசம் அளித்துள்ளேன்.

விசாரணை ஆவணங்கள் முடிக்கப்பட்டு துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்கள் கூட ஆகாது என்று நான் நம்புகிறேன், என்று அவர் கூறினார்.

முன்னதாக கடந்த மே 29 அன்று, வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சுமார்  32 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை எம்ஏசிசி பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset