நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வோய், என் சகோதரியை கொன்று விட்டாயே; கொஞ்சம் மூளையைப் பயன்படுத்து: சிப்பாங் நீதிமன்ற வளாகத்தில் கத்திய மணிஷாப்ரீத்தின் உறவினர்

சிப்பாங்:

வோய், என் சகோதரியை கொன்று விட்டாயே. கொஞ்சம் மூளையைப் பயன்படுத்து என்று மாணவி மணிஷாப்ரீத்தின் உறவினர்  சிப்பாங் நீதிமன்ற வளாகத்தில் கத்தினார்.

கடந்த ஜூன் 24 ஆம் தேதி சைபர்ஜெயாவில் உள்ள பல்கலைகழக தங்கும் விடுதியில் மாணவி மணிஷாப்ரீத் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இக்கொலை வழக்கில் தொடர்புடை மூன்று சந்தேக நபர்கள் இன்று காலை சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

அப்போது  மாணவியின் குடும்ப உறுப்பினர் என்று நம்பப்படும் ஒருவர் சந்தேக நபரை அணுக முயன்றபோது, ​​இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு கணம் பதட்டமான சூழல் நிலவியது.

தனது தடுப்புக் காவல் நீட்டிப்பு விண்ணப்பத்தை முடித்துவிட்டு, சந்தேக நபர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போது, ​​சிவப்பு சட்டை அணிந்த உயரமான நபர் சந்தேக நபரை அணுக முயன்றார்.

குறிப்பாக  சம்பந்தப்பட்ட நபர் கூச்சலிட்டுக் கொண்டே அவர்களை நோக்கி நடந்து வந்தார்.

வோய்,  நீ என் சகோதரியைக் கொன்று விட்டாய். கொஞ்சம் மூளையைப் பயன்படுத்து என அவர் தூரத்திலிருந்து கத்தினார்.

சம்பந்தப்பட்ட நபரை அமைதிப்படுத்த சம்பவ இடத்தில் இருந்த போலிஸ் அதிகாரியின் விரைவான நடவடிக்கையை மேற்கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset