
செய்திகள் மலேசியா
ஈப்போ கொலை வழக்கு: அனைத்துலக குற்றத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது: போலிசார்
ஈப்போ:
ஈப்போ கொலை வழக்கு அனைத்துலக குற்றத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
பேரா மாநில போலிஸ் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் இதனை தெரிவித்தார்.
கடந்த ஜூன் 24 அன்று ஈப்போவின் தாமான் தாசேக் டாமாயில் துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்தது.
இந்த சம்பவத்தில் மார்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இறந்து கிடந்த நபருக்கு ஒரு அனைத்துலக குற்றக் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
இது குண்டர் கும்பல் செயல்பாடுகளை விட பெரியது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையில் இது ஒரு சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:42 pm
நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm