நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்ஹெந்தியான் படகு விபத்து: போதைப் பொருள் உட்கொண்டதை ஒப்புக் கொண்டார்

பெட்டாலிங் ஜெயா:

மூவரின் உயிரைப் பறித்த பெர்ஹெந்தியான் படகு விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட ஓட்டுநர்  போதைப் பொருள் உட்கொண்டதை ஒப்புக் கொண்டார். 

22 வயதான அஸ்ரி யாசித், பெசுட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் Majistret Nurliyana Md Zukri முன்னிலையில் தனக்கெதிரான குற்றத்தைப் படகு ஓட்டுநர் ஒப்புக் கொண்டார்.

அஸ்ரி யாசித் nimetazepam வகை போதைப் பொருளை உட்கொண்டதற்காக  குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஜூன் 29-ஆம் தேதி, காலை 10.05 மணிக்கு பெசுட் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

அவர் மீது 1957 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 15 (1)(A) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இது அதிகபட்சமாக RM5,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது.

அஸ்ரியை RM2,500 ஜாமீன் மற்றும் ஒரு உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

நோயியல் அறிக்கையைப் பெறும் காரணத்தினால் இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 4-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset