நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு: விசாரணை அறிக்கையில் சிலாங்கூர் மாநில அரசு தலையீடு இல்லை

சைபர் ஜெயா:

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு தொடர்பான விசாரணையில் சிலாங்கூர் மாநில அரசு தலையீடவில்லை என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். 

இந்த விசாரணை சிலாங்கூர் அரசாங்கத்தின் லையீடு இல்லாமல் தனிச்சையாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். 

மாநில அரசு விசாரணையில் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் 212 சாட்சிகளில் ஒருவராக மட்டுமே பணியாற்றியதாகவும் அவர் கூறினார்.

விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழு மாநில அரசுக்கு எவ்வாறு  அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பரிந்துரை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

சில தரப்பினர் விசாரணை வெளிப்படையாக நடக்கவில்லை என்று கூறுவதால் அந்த அறிக்கை தவறானது என்று அர்த்தமல்ல என்று அமிருடின் சுட்டிக் காட்டினார். 

எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான விசாரணையின் முழு அறிக்கையும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டவுடன் பொது மக்களுக்கு வெளியிடப்படும் என்று செலாயாங் நகராண்மைக் கழகத்தின் 2035ஆம் ஆண்டுவரையிலான திட்டமிடல், வரைவு திட்டத்திற்கான பொதுமக்கள் பங்கேற்பும் விளக்கக்கூட்டத்திற்கு பின் அமிருடின் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset