
செய்திகள் மலேசியா
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 13ஆவது மலேசியத் திட்டத்தில் 8 அம்ச திட்டங்களை மஇகா முன்மொழிந்துள்ளது: டத்தோஶ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 13ஆவது மலேசியத் திட்டத்தில் 8 அம்ச திட்டங்களை மஇகா முன்மொழிந்துள்ளது.
மஇகா துணைத் தலைவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
மஇகாவின் திட்டங்கள் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையை மேம்படுத்துதல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பொருளாதார வாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது.
இந்திய சமூகத்திற்குள் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வடிவமைக்கப்பட்ட முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை இத் திட்டங்கள் வலியுறுத்துகிறது.
குறிப்பாக அர்த்தமுள்ள சீர்திருத்தத்திற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக இந்த 13ஆவது மலேசிய திட்டம் அமைய வேண்டும்.
வழக்கமான அணுகுமுறைகள் தற்கால சூழலுக்கு போதுமானதாக இல்லை.
இந்திய சமூகம் எதிர்கொள்ளும் அரைகூவல்களுக்கு புதுமையான, இலக்கு வைக்கப்பட்ட தீர்வுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
இது முறையான திட்டமிடல், உறுதியான அர்ப்பணிப்பு இரண்டையும் கோரும் பெரிய பணியாகும்.
2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியா ஒரு முதிர்ச்சியான நாடாக மாறுவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மூத்த அல்லது வயதான மக்களை ஆதரிப்பதற்கும் அவர்களின் நலனை உறுதி செய்வதற்கும் அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கைகள் தேவை என்று அவர் கூறினார்.
அதிகரித்து வரும் தேவைகள் நிறைந்த வேலைச் சந்தையில் போட்டித்தன்மையுடன் இருக்க இளம் மலேசியர்களை எதிர்காலத்திற்குத் தயாராகும் வகையான திட்டங்கள் தேவை.
நான்காவது தொழில்துறை புரட்சியின் கோரிக்கைகளுடன், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் போன்ற துறைகளில், இளைஞர்கள் மீள் திறன் தொகுப்புகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:42 pm
நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm
கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா
July 3, 2025, 3:25 pm