
செய்திகள் மலேசியா
ஒரே நேரத்தில் நீதித்துறையின் 3 உயர் பதவிகளை வகிப்பது நாட்டின் சட்ட வரலாற்றில் மிகவும் விசித்திரமானது: தக்கியூடின்
புத்ராஜெயா:
நீதித்துறையின் 3 உயர் பதவிகளை மலாயாவின் தலைமை நீதிபதி வகிக்கிறார்.
இது நாட்டின் சட்ட வரலாற்றில் மிகவும் விசித்திரமானது என்று தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற அவைத் தலைவர் தக்கியூடின் ஹசான் இதனை கூறினார்.
மலாயாவின் தலைமை நீதிபதி ஹஸ்னா முகமது ஹாஷிம், நீதித்துறையில் இரண்டு உயர் பதவிகளாக அதாவது தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக பணியாற்றவுள்ளார்.
ஒரே நேரத்தில் 3 உயர் பதவிகளில் செயல்பட நியமிக்கப்பட்டதை தேசியக் கூட்டணி தீவிரமாகவும் ஆழமாகவும் வருத்தம் தெரிவிக்கிறது.
நாட்டின் சட்ட வரலாற்றில் இது மிகவும் விசித்திரமானது. அசாதாரணமான, முன்னோடியில்லாத வளர்ச்சி என்று அவர் கூறினார்.
இது அதிகாரங்களைப் பிரிக்கும் முறையின் நேர்மை, எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் சட்டத்தின் ஆட்சியின் கொள்கைக்கு அடிப்படையான நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என்று தக்கியூடின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:42 pm
நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm
கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா
July 3, 2025, 3:25 pm