
செய்திகள் மலேசியா
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
புத்ரா ஜெயா:
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தியாளர் ஆகிய இரு நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பு பொருள்களின் விலை உயர்வை ஒத்திவைக்க ஒப்புக் கொண்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் Datuk Armizan Mohd Ali தெரிவித்தார்.
விலை உயர்வுக்கான காரணத்தைக் கோரி உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சகம் அவ்விரு நிறுவனங்களுக்கும் அபராத அறிக்கை அனுப்பியதை தொடர்ந்து அவர்கள் விலை உயர்வை ஒத்திவைக்க ஒப்புக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
விலை கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டம் 2011 இன் பிரிவு 21 இன் கீழ் அவர்கள் முறையான விளக்க கடிதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று Datuk Armizan Mohd Ali கூறினார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சத்தின் அமலாக்க தின கொண்டாட்டத்துடன் இணைந்து நடைபெற்ற மூலோபாய கூட்டாளர் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதிக இயக்க செலவுகள் காரணமாக இரு நிறுவனங்களும் உற்பத்தி பொருள்களின் விலையை உயர்த்தியதாக கூறின என்று Datuk Armizan Mohd Ali தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:42 pm
நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
July 3, 2025, 4:15 pm
கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா
July 3, 2025, 3:25 pm