
செய்திகள் மலேசியா
13ஆவது மலேசிய திட்டத்தில் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக 40 பரிந்துரைகள்; பிரதமர் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: சார்லஸ் சந்தியாகோ
பெட்டாலிங் ஜெயா:
இந்தியர்களின் மேம்பாட்டிற்காக 13ஆவது மலேசிய திட்டத்தில் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 40 பரிந்துரைகள் பிரதமர் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற முன்னாள் சார்லஸ் சந்தியாகோ இதனை தெரிவித்தார்.
மலேசியா இல்திஷாம் அறவாரியத்தின் ஏற்பாட்டில் 4 பட்டறைகள் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் இப் பட்டறையில் கலந்து கொண்டனர்.
13ஆவது மலேசிய திட்டத்தில் இந்தியர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கும் நோக்கில் பட்டறைகள் நடத்தப்பட்டது.
இப் பட்டறைகளின் வாயிலாக கிட்டத்தட்ட 40 பரிந்துரைகள் உருவாக்கப்பட்டது. இது 5 முதன்மை திட்டங்களாகவும் 11 பரிந்துரைகளாகவும் ஒருங்கிணைப்பட்டுள்ளது.
கல்வி சீர்த்திருத்தம், மகளிர், இளைஞர் மேம்பாடு, குறு, சிறு, நடுத்தர வணிகர்களின் மேம்பாடு, நிறுவன சீர்த்திருத்தம், தொழில் திறன் பயிற்சி தொடர்பாக இந்த பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளது.
இந்த பரிந்துரைகள் பொருளாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ நோர் அஸ்மியிடம் ஜூன் 23 ஆம் சமர்ப்பித்து விட்டோம் என்று அவர் கூறினார்.
மலேசிய இந்திய சமுதாயத்திற்கு ஒரு நிலையான, சமமான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதே சமயம் மித்ரா மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்திய பெண்கள் மற்றும் இளைஞர் தலைமையை மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்று வேண்டும்.
கல்வியை பாதியிலேயே கைவிடும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெரும் கவலை அளிக்கிறது.
இதற்கு தீர்வு காண வேண்டும். ஒரு கல்வி கற்ற சமுதாயமாக இந்தியர்கள் இருக்க வேண்டும்.
இந்திய மாணவர்கள் கல்வியை முழுமையாக முடிக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி கல்வி வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும். மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் பாலர்பள்ளி கல்வி கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.
கல்வி, பொருளாதரத்தில் பின் தங்கிவிட்ட இந்திய சமுதாயத்திற்கு உதவிட அரசாங்கம் முன் வர வேண்டும்.
மக்கள் தொகையில் 6.1 விழுக்காடாக இருக்கும் இந்திய சமுதாயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு சிறந்த நிலையில் இருக்க நமது மாணவர்கள், இளைஞர்கள், மகளிர்கள் உருமாற்றம் பெற வேண்டும்.
குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ் பள்ளிகள் இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடமாற்றம் செய்வது இந்த பரிந்துரையில் முக்கிய அங்கமாகும்.
அதேசமயம் பாலர் பள்ளிகள் இல்லாத தமிழ்ப் பள்ளிகளில் கண்டிப்பாக பாலர் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:42 pm
நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm
கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா
July 3, 2025, 3:25 pm