நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலையில் வாகனங்களை மறைத்த சம்பவம் தொடர்பில் ஆடவர் கைது

ரெம்பாவ்:

நெடுஞ்சாலையில் வாகனங்களை மறைத்த சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவை போலிசார் கைது செய்துள்ளனர்.

ரெம்பாவ் போலிஸ் தலைவர் ஹசானி ஹுசைன் இதனை தெரிவித்தார்.

வடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் தெற்கு நோக்கி பெடாஸ் - லிங்கி ஓய்வெடுக்கும் இடத்திற்கு  அருகில் வழித்தடத்தை மறித்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாந்து.

இந்த சம்பவம் தொடர்பான மூன்று கார்களின் உரிமையாளர்களில் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

50 வயதுடைய சந்தேக நபர் நேற்று இரவு 12.30 மணியளவில் சிரம்பானில் கைது செய்யப்பட்டார்.  மற்ற சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

சந்தேக நபர் ஒரு வாகனத்தை இழுத்துச் செல்லும் முகவர், மேலும் அவர்கள் ஒரு காரை இழுத்துச் செல்ல விரும்பியதால் வாகனத்தை நிறுத்தினர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset