நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா

கோலாலம்பூர்:

அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்பு திட்டமான கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் ஜலிஹா முஸ்தாபா தெரிவித்தார். 

கோத்தா மடானி வீடமைப்பு திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்ற பாஸ் கட்சியின் இளைஞர் தலைவர் அஃப்னான் ஹமிமி தைப் அசமுடின் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ஜலிஹா குறிப்பிட்டார். 

அரசு ஊழியர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதன் திட்டம் அவசியம் என்று ஜலிஹா கூறினார்.

அரசு ஊழியர்களுக்கான வீடுகள் பற்றாக்குறை பிரச்சனையைச் சமாளிக்க இத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, நாட்டின் கடன் சுமை, பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று  அஃப்னான் ஹமிமி தைப் அசமுடின் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset