நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவி கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபருக்கு கெட்ட எண்ணம் இருந்தாக போலிஸ் கூறியது தவறு: வழக்கறிஞர் மனோகரன்

சிப்பாங்:

பல்கலைக்கழக மாணவி கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபருக்கு கெட்ட எண்ணம் இருந்தாக போலிஸ் கூறியது தவறு.

முக்கிய சந்தேக நபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் எம். மனோகரன் இதனை கூறினார்.
 
தனது கட்சிக்காரருக்கு கெட்ட எண்ணம் இருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்ட போலிஸ் நடவடிக்கையை கேள்வி எழுப்பினார்.

விசாரணை செயல்முறை இன்னும் நடந்து வருகிறது.

சட்டப்படி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்பதால் போலிசார் அத்தகைய அறிக்கையை வெளியிட்டிருக்கக்கூடாது என்றும்.

எனது கட்சிக்காரரின் வழக்கைப் பாதிக்கக்கூடிய ஒரு அறிக்கை, ஆதாரங்களை வெளியிட்ட சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கானின் நடவடிக்கை குறித்து நாங்கள் நீதிபதியிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளேன்.

இது மிகவும் தீவிரமான விஷயம்.

போலிசாரின்  வேலை விசாரணை செய்வதாகும். யார் குற்றவாளி, யார் குற்றவாளி அல்ல என்பதைத் தீர்மானிப்பது அல்ல.

அதை முடிவு செய்ய புத்திசாலித்தனமான நீதிபதிகள் உள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset