நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கார் விபத்திற்குப் பிறகு போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இருவர் கைது

பிரிக்பீல்ட்ஸ்:

கார் விபத்திற்குப் பிறகு போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இருவர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலிஸ் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூத் இதனை கூறினார்.

நேற்று அதிகாலை இங்குள்ள தாமான் தேசாவில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபரை நோக்கி போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இது குறித்து போலிசாருக்கு 28 வயது கார் ஓட்டுநரிடமிருந்து நள்ளிரவு 12.55 மணிக்கு புகார் கிடைத்தது.

அவர் ஓட்டி வந்த ஹோண்டா சிட்டியை இரவு 11 மணிக்கு மற்றொரு வாகனம் மோதியதாக அந்த நபர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  திடீரென்று சம்பந்தப்பட்ட டொயோட்டா யாரிஸ் காரின் ஓட்டுநர் ஒரு கருப்பு துப்பாக்கியை எடுத்து புகார் தாரரை நோக்கி காடி மிரட்டியதாக புகாரின் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவ 19 மற்றும் 27 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்களை போலீசார் கைது செய்தனர் என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset