நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா: நில அமிழ்வு தொடர்பான விசாரணை அறிக்கை நிறைவு 

கோலாலம்பூர்: 

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நிலஅமிழ்வு சம்பவம் தொடர்பான முழு விசாரணை அறிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேசங்களுக்கான அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்தார். 

இந்த முழுமையான விசாரணை அறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

தனக்கு முழு அறிக்கை இப்போதுதான் கிடைத்ததாகவும் நிலஅமிழ்வு ஏற்பட்டதற்கான மற்ற காரணங்களைத் தனது தரப்பு ஆய்வு செய்து வருவதாக ஜலிஹா குறிப்பிட்டார்.

முன்னதாக, கடந்தாண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி  ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நிலஅமிழ்வில் இந்தியாவை சேர்ந்த 48 வயதான விஜயலெட்சுமி புதையுண்டது குறிப்பிடத்தக்கது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset