நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3D தொழில்நுட்பத்தில் உடல் உறுப்புகளைத் தயாரிக்கும் ஹாங்காங்

விக்டோரியா:

ஹாங்காங் பல்கலைக்கழகம் 3D முப்பரிமாணத்தைப் பயன்படுத்தி சுவாசத் திசுக்களையும் சிறு உடல் உறுப்புகளையும் தயாரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மாற்று உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவ இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது

குறிப்பாகத் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முப்பரிமாண அச்சிடப்பட்ட சுவாசப்பாதையை உருவாக்க பல்கலைக்கழகம் முயன்று வருவதாக நோய் எதிர்ப்பு, தொற்று மையத்தின் பேராசிரியர் மைக்கல் சான் சி வாய் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் சொந்த உயிரணுக்களிலிருந்து உருவாக்கப்பட்ட உறுப்புகள் அதற்குப் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் உயிரியல் பொருள்களைப் பயன்படுத்திக் காற்றுப்பாதையை முப்பரிமாண முறையில் அச்சிட உதவுகின்றன.

ஆனால் உயிரணுக்கள் இல்லாமல் அந்தக் காற்றுப்பாதையைச் செயல்படுத்த முடியாது.

இப்புதிய முயற்சி காற்றுப்பாதையை உருவாக்குவதோடு நின்று விடாது என்றார் திரு சான். மற்ற உடல் உறுப்புகளையும் தயாரிக்க எண்ணம் இருப்பதாக அவர் சொன்னார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset