நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியா செல்ல இனி இலவச விசா இல்லை: தூதரகம் அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்தியாவிற்கு செல்லும் மலேசியர்கள் விசா கட்டணம் செலுத்த வேண்டும் என்று மலேசியாவிற்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை இந்தியா செல்ல விரும்பும் மலேசியர்கள் 30 நாள்களுக்குள் அந்நாட்டிற்கு இருமுறை சென்று வருவதற்கான இலவச இ-விசா சலுகை இலவசமாக வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இந்தச் சலுகை நிறைவடைந்துள்ளதாக மலேசியாவிற்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வத் தளத்தில் அறிவித்துள்ளது.

இனி இந்தியாவிற்கு செல்லும் மலேசியர்கள் https://indianvisaonline.gov.in/evisa/tvoa.htmlExternal Link Icon என்ற அகப்பக்கத்தில் இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

e-Business, e-Conference, e-Medical, e-Medical Attendant, e-Ayush, e-Emergency X Miscellaneous போன்ற அனைத்து வகையான இ-விசாகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று  இந்திய தூதரகம் கூறியது.

அத்துடன், சுற்றுப்பயண இ-விசா மற்றும் பிறவகை விசாகள் தொடர்பில் நடப்பிலுள்ள விதிமுறைகள் தொடரும் என்றும் இந்தியத் தூதரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விசா சேவை வழங்குநர்கள் மூலமாக அல்லது தூதரகத்திலிருந்து நேரடியாக வழக்கமான தாள் விசா பெற விரும்புவோர் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset