நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாமிய வெறுப்பு பிரச்சினையை விவேகமாக கையாள்வது தொடர்பாக இத்தாலிய இஸ்லாமிய சமூக சங்கத்தினரிடம் பிரதமர் கலந்துரையாடல் 

ரோம்: 

இத்தாலிய இஸ்லாமிய சமூக சங்கத்தின் (COREIS) துணைத் தலைவர் இமாம் யஹ்யா பல்லவிசினி, இத்தாலிய இஸ்லாமிய கலாச்சார மையம்-ரோம் கிராண்ட் பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் அப்துல்லாஹ் ரெடோனே ஆகியோர் தலைமையிலான இத்தாலிய  இஸ்லாமிய சமூகத்தினரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்து கலந்துரையாடினார். 

இந்தச் சந்திப்பு, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சினையை புத்திசாலித்தனமாகவும் விவேகமாகவும் கையாள்வது உட்பட, இஸ்லாமிய சமுதாயத்தின்  வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கவும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பளித்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

May be an image of 5 people and text

கல்வி, அழைப்பியல் இத்தாலியில் உள்ள இஸ்லாமிய சமூகத்துடன் சர்வதேச ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, சமூக நல்லிணக்கத்தின் மதிப்பை வலியுறுத்தும் இஸ்லாத்தின் கண்ணியத்தில் மலேசியாவின் அர்ப்பணிப்பை பிரதமர் அந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

சகோதரத்துவத்தின்  அடையாளமாக, இத்தாலிய இஸ்லாமிய சமூகத்திற்கு மலேசியாவின் பங்களிப்பை தெரிவித்ததோடு, அறிவைப் பரப்புவதற்கான அடையாளமாக இத்தாலிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 10 திருக்குர்ஆன் பிரதிகளுடன் கூடுதலாக, மலேசியாவில் பதிப்பிக்கப்பட்ட குர்ஆனின் சிறப்பு பிரதிகளையும்  அவர்களுக்கு பிரதமர் வழங்கினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset