
செய்திகள் மலேசியா
வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வீர்: தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ சரவணன் அறிவுரை & மாணவர் உதவிநிதிக்கு வெ.5,000 நன்கொடை வழங்கினார்
கோலாலம்பூர்:
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இப்போது அதிகமான உதவிகள் கிடைக்கின்றன. பொது அமைப்புகள் வழங்கும் இந்த உதவிகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ம. இ. கா. தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிவுரை கூறினார்
அண்மையில் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப்பள்ளியில் உள்ள இராமகிருஷ்ணா மண்டபத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர் உதவிநிதி வாரியம் நடத்திய நேரடிக் கட்டுரைப்போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு டத்தோஸ்ரீ சரவணன் தலைமை வகித்து உரையாற்றினார்.
தமிழப்பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வாசிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதன் மூலமாகவே மாணவர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி அடைய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி அறவாரியம் மத்திய மண்டலத்திற்கு நடத்திய இந்த நேரடி காட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள 20 மாணவர்கள் தகுதி பெற்றனர். இவர்களில் காஜாங், வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆ. வர்ஷிகா ஆனந்தன் ஆயிரம் வெள்ளி முதல் பரிசை வென்றார்.
சுங்கை பெலேக் தெலுக் மெர்பாவ் தமிழப்பளியைச் சேர்ந்த விமோஷா தங்கமணி வெ.700 இரண்டாம் பரிசை வென்றார். பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சிவப்பிரியா மேகராஜன் 500 வெள்ளி மூன்றாம் பரிசை வென்றார். மற்றும் ஐந்து மாணவர்கள் தலா 100 வெள்ளி ஆறுதல் பரிசை வென்றனர்.
இந்த மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ சரவணன் பரிசுகளை எடுத்து வழங்கினார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஷா ஆலம் கல்லூரி மாணவர் ஜனார்த்தனன் பெரியசாமிக்கு வெ.600.00 கல்வி உதவிநிதியும் வழங்கப்பட்டது.
விவேகானந்தா ஆசிரமம் வழங்கிய திறன் டி.வி.
முதல் பரிசு பெற்ற மாணவியின் பள்ளிக்கு ஒரு திறன் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. இந்த இந்த தொலைக்காட்சிப் பெட்டியை ஆசிரமத்தின் சார்பில் அதன் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அம்பிகைபாகன் வழங்கினார்.
இந்தப் பரிசளிப்புக்குப் பிறகு தமிழ்ப்பள்ளி மாணவர் உதவிநிதி வாரியத்திற்கு டத்தோஸ்ரீ சரவணன் வெ.5000.00 நன்கொடை வழங்கினார். இந்த நன்கொடையை வாரியத்தின் தலைவர் வே. விவேகானந்தன் பெற்றுக் கொண்டார்.
வாரியத்தின் செயலாளர் கே. பத்மநாபன் நன்றியுரை நிகழ்த்தினார். வாரியத்தின் அறங்காவலர் கே. ரகுநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm
கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா
July 3, 2025, 3:25 pm
ஈப்போ கொலை வழக்கு: அனைத்துலக குற்றத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது: போலிசார்
July 3, 2025, 3:24 pm
நெடுஞ்சாலையில் வாகனங்களை மறைத்த சம்பவம் தொடர்பில் ஆடவர் கைது
July 3, 2025, 3:12 pm