நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் மின்னியல் சிகரெட்டிற்கு தடை விதியுங்கள்: பகாங் ஆட்சியாளர் நினைவுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா:

நாடு தழுவிய அளவில் மின்னியல் சிகரெட் பயன்பாட்டிற்கு தடை விதியுங்கள் என்று பகாங் ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா இன்று மீண்டும்  வலியுறுத்தியுள்ளார்.

இளைய தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் மின்னியல் சிகரெட் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

காரணம், இது இளைய தலைமுறையினரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக  அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா குறிப்பிட்டார். 

அதனால், மின்னியல் சிகரெட் பயன்பாட்டை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய வேண்டும் என்று அல்-சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார். 

பகாங் அரசாங்கம் ஏற்கனவே அத்தகைய தடையை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, கடந்தாண்டு நவம்பர் மாதம் நாடு தழுவிய அளவில் மின்னியல் சிகரெட் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்தார்.

அதன் பின்னர், பல மாநில அரசாங்கங்கள் மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய முடிவு செய்தன.

அவற்றில் திரெங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா ஆகியவை அடங்கும்.

அதே நேரத்தில் பகாங் மாநில அரசாங்கம் வேப் பயன்பாட்டை முழுவதுமாக தடை செய்ய நடவடிக்கை எடுத்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset