
செய்திகள் மலேசியா
சைபர்ஜெயா மாணவி கொலை: மூன்று சந்தேக நபர்களின் தடுப்புக் காவல் ஜூலை 10-ஆம் தேதி வரை நீட்டிப்பு
சைபர்ஜெயா:
சைபர்ஜெயாவில் 20 வயது பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரித் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களின் தடுப்புக் காவல் ஜூலை 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் கைராதுல் அனிமா ஜெலானி இந்தத் தடுப்புக் காவலை இன்னும் ஏழு நாள்கள் நீட்டிக்க அனுமதி வழங்கியதாக செப்பாங் காவல்துறைத் தலைவர் Norhizam Bahaman கூறினார்.
ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை அம்மூவர் தடுப்புக் காவலில் இருப்பார்கள் என்று Norhizam Bahaman தெரிவித்தார்.
ஜூன் 27 அன்று செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசரோரானி அப்துல் ரஹ்மான் வழங்கிய முந்தைய தடுப்புக் காவல் உத்தரவு இன்றோடு நிறைவடைந்தது.
ஜூன் 26, 27 ஆகிய இரு நாள்களில் 19 வயதிலிருந்து 20 வயதுக்கு உட்பட்ட ஆடவரையும் இரண்டு பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, ஜூன் 24 ஆம் தேதி காலை 10 மணியளவில் தனது அறையில் மாணவி மனிஷாபிரித் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm
கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா
July 3, 2025, 3:25 pm
ஈப்போ கொலை வழக்கு: அனைத்துலக குற்றத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது: போலிசார்
July 3, 2025, 3:24 pm
நெடுஞ்சாலையில் வாகனங்களை மறைத்த சம்பவம் தொடர்பில் ஆடவர் கைது
July 3, 2025, 3:12 pm