நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைமை நீதிபதியின் அதிகாரங்களையும் கடமைகளையும்  மலாயா தலைமை நீதிபதி நிரப்புவார் 

புத்ராஜெயா: 

மலாயா தலைமை நீதிபதி டான் ஸ்ரீ ஹஸ்னா முகமது ஹாஷிம், தலைமை நீதிபதி பதவி நிரப்பப்படும் வரை அவரது அதிகாரங்களையும் கடமைகளையும் செயல்படுத்துவார்.

கூட்டாட்சி நீதிமன்றத்தின் பதிவாளர் இயக்குநர் அலுவலகம் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தது.

இது கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 131ஏ, நீதித்துறை நீதிமன்றங்கள் சட்டம் 1964 [சட்டம் 91] பிரிவு 9 (1) (பி) மற்றும் பிரிவு 9 (3) இன் விதிகளின்படி இருப்பதாகக் கூறியது.

அதன் படி, கடமைகளைப் பயன்படுத்துவதில் அரசியலமைப்பின் கீழ் தலைமை நீதிபதியின் செயல்பாடுகளும் அடங்கும்.

தலைமை நீதிபதியில் பதவி நிரப்பப்படும் இது அமலில் இருக்கும்.

நீதியின் பாதுகாவலர்களாக மலேசிய நீதித்துறை எப்போதும் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்து வரும்.

மேலும்  மக்களுக்கும் நாட்டிற்கும் முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவை செய்யும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset