
செய்திகள் மலேசியா
புதிய நியமனம் வரை ஹஸ்னா முஹம்மத் இடைக்காலத் தலைமை நீதிபதியாகச் செயல்படுவார்
புதிய நியமனம் வரை ஹஸ்னா முஹம்மத் இடைக்காலத் தலைமை நீதிபதியாகச் செயல்படுவார்
கோலாலம்பூர்:
மலாயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டான்ஸ்ரீ ஹஸ்னா மலேசியாவின் இடைக்காலத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை பொறுப்பிற்கான புதிய நீதிபதியை அடையாளம் காணும் அவர் சேவையாற்றுவார் என கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் கூறியது
கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 131A மற்றும் நீதித்துறை நீதிமன்றச் சட்டத்தின் பிரிவு 9(1)(b) மற்றும் பிரிவு 9(3) [சட்டம் 91] ஆகியவற்றின் படி புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை நீதிபதி டான்ஸ்ரீ ஹஸ்னா முஹம்மத் ஹாஷிம் அப்பொறுப்பில் செயல்பட அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டத்துறையில் இரண்டாவது மிக உயர்ந்த நீதிபதியாக திகழும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் (PCA) தலைவர் டான்ஸ்ரீ அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிமும் இவ்வாரம் பணிஓய்வு பெறுவதால் அவர் இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட இயலாது.
அதனால் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதி ஹஸ்னா தற்போது நாட்டின் இடைக்காலத் தலைமை நீதிபதியாக செயல்படுவார் கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm
கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா
July 3, 2025, 3:25 pm
ஈப்போ கொலை வழக்கு: அனைத்துலக குற்றத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது: போலிசார்
July 3, 2025, 3:24 pm
நெடுஞ்சாலையில் வாகனங்களை மறைத்த சம்பவம் தொடர்பில் ஆடவர் கைது
July 3, 2025, 3:12 pm