நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெலுக் இந்தான்: ங்கா-வை வீழ்த்த அவருக்கு இணையான வேட்பாளர் தேவை: ஆய்வாளர் கருத்து

பெட்டாலிங் ஜெயா:

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்ற தேசியக் கூட்டணிக்கு ங்கா கோர் மிங்கிற்கு இணையான வேட்பாளர் தேவை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

டிஏபியின் துணைத் தலைவருமான ங்காவிற்கு இணையான வேட்பாளரைத் தேசிய கூட்டணி களமிறக்க தவறினால் அக்கட்சி அந்தத் தொகுதியைக் கைப்பற்றுவது கடினம் என்றும் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளரான Mazlan Ali  கூறியுள்ளார்.

வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சரான ங்கா கோர் மிங்கிற்கு அரசியல் ஆதரவாளர்கள் அதிகம் ஆதரவு தெரிவிக்கின்றனர். 

அதிலும், குறிப்பாக ஒட்டுமொத்த சீன சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வாக்கு மிக்க நபராகவும் ங்கா கோர் மிங் திகழ்வதாக Mazlan Ali  சுட்டிக் காட்டினார். 

தெலுக் இந்தானைக் கைப்பற்ற ங்காவிற்கு இணையான ஒரு வேட்பாளரை கெராக்கான் கட்சியிலிருந்து களமிறக்கினால் அத்தொகுதியில் போட்டி கடினமாக இருக்கும் என்றும்  Mazlan Ali குறிப்பிட்டார். 

இருப்பினும், தற்போதைய அரசியல் சூழலில் சீன வாக்காளர்களின் வலுவான ஆதரவைக் கொண்ட டிஏபி-க்கு எதிராக கெராக்கான் வேட்பாளரைக் களமிறக்குவது மிகவும் சவாலானது என்றார் அவர். 

முன்னதாக, மக்களிடையே ஏற்பட்ட மாற்ற, அரசாங்கத்தின் பலவீனமான செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அந்தத் தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்றுவது சாத்தியமில்லை என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் Ahmad Fadhli Shaari தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் டிஏபி இத்தொகுதியைத் தற்காக்க தவறியது.

அந்த இடைத்தேர்தலில் டிஏபி வேட்பாளர் Dyana Sofya-க்குப் போட்டியாக களமிறங்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் கெராக்கான் தலைவர் Mah Siew Keong 238 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். 

இருப்பினும், 14-ஆவது பொது தேர்தலில் Mah Siew Keong-வை 11,179 வாக்குகள் பெரும்பான்மையில் ங்கா கோர் மிங் தெலுக் இந்தான் தொகுதியை மீண்டும் டிஏபி வசமாக்கினார். 

15-ஆவது பொது தேர்தலிலும் ங்கா கோர் மிங் தெலுக் இந்தான் தொகுதியில் போட்டியிட்டு அத்தொகுதியைத் தற்காத்துக் கொண்டார். 

தெலுக் இந்தான் 50 விழுக்காடு மலாய்க்காரர்கள், 33 விழுக்காடு சீனர்கள் மற்றும் 17 விழுக்காடு இந்தியர்களின் வாக்குகளைக் கொண்டது.

தெலுக் இந்தானில் தேசிய கூட்டணி வெற்றி பெற நினைத்தால் அவர்கள் இந்தியர்கள் அதிலும் குறிப்பாக சீன வாக்குகளைப் பெறுவது மிக அவசியமானது என்று  Mazlan Ali கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset