நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் நடத்த கார் கழுவும் மையங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 150 பேர் கைது செய்யப்பட்டனர்

ஜொகூர்பாரு:

ஜொகூரில் நடத்த கார் கழுவும் மையங்களுக்கு எதிரான நடவடிக்கையில் கிட்டத்தட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜொகூர் மாநில போலிஸ்  தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

இஸ்கந்தர் மேம்பாட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள 64 கார் கழுவும் மையங்களில் நேற்று ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில்  மொத்தம் 147 வெளிநாட்டினரும் மூன்று உள்ளூர் ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத குடியேறிகள் இருப்பதைத் தடுப்பதோடு, போதைப்பொருள் துஷ்பிரயோகம், இணைய சூதாட்டம் போன்ற பிற குற்றச் செயல்களையும் தடுப்பதற்காகவும் இச் சோதனை நடத்தப்பட்டது.

குறிப்பாக கார் கழுவும் மைய நடத்துநர்கள் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாஸ் அல்லது அனுமதிச் சீட்டின் நிபந்தனைகளை மீறியதற்காக குடிவரவு விதிமுறைகள் 1963 இன் பிரிவு 39(பி), செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாததற்காக குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(சி) மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 15(1)(சி) ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset