நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா ஜிஎல்சி நிறுவனத்தின் மூத்த நிர்வாகியை எம்ஏசிசி கைது செய்தது

கோத்தா கினபாலு:

சபா மாநிலத்தில் உள்ள அரசுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் (ஜிஎல்சி) மூத்த நிர்வாகியை எம்ஏசிசி கைது செய்துள்ளது.

16,000 ரிங்கிட் கையூட்டு கேட்டு பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

50 வயதுடைய சந்தேக நபர் நேற்று மாலை 4 மணியளவில் சபா எம்ஏசிசி அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கடந்த ஆண்டு இந்தச் செயலைச் செய்ததாகவும், சுமார் 16,000 ரிங்கிட் பெற்றதாகவும் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

சபாவைச் சுற்றியுள்ள ஜிஎல்சியின் கீழ் பழுதுபார்க்கும் பணிகளைப் பெறுவதற்கு ஈடாக சந்தேக நபர் தனது வங்கிக் கணக்கிற்கு கட்டம் கட்டமாக லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.

சபா எம்ஏசிசி இயக்குனர் எஸ். கருணாநிதியைத் தொடர்பு கொண்டபோது இந்த கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 16(ஏ)(பி) இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset