நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கில் கைதான 3 சந்தேக நபர்களின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்படலாம்: போலிஸ்

சிப்பாங்:

பல்கலைகழக மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கில் கைதாக 3 சந்தேக நபர்களின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்படலாம்.

சிப்பாங் மாவட்ட  போலிஸ் தலைவர் நோர் ஹிசாம் பஹாமான் இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த ஜூன் 24 அன்று சைபர்ஜெயாவில் தனியார் பல்கலைக்கழக மாணவர் கொலை வழக்கில் 3 சந்தேக நபர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட வாய்ப்புள்ளது.

​​தடுப்புக்காவலை நீட்டிக்க விண்ணப்பம் செய்வதற்காக மூவரும் இன்று சிப்பாங் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்.

அவர்கள் ஜூன் 27 முதல் நாளை வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாதிக்கப்பட்டவரின் வீட்டுத் தோழரின் காதலன் உட்பட முக்கிய சந்தேக நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதன் மூலம், 48 மணி நேரத்திற்குள் வழக்கைத் தீர்த்துவிட்டதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset