நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் சுற்றுலா பேருந்து விபத்து: இருவர் மரணம்; 16 பேர் காயம்

ஜொகூர் பாரு:

ஜொகூர் ஆயிர் ஈத்தாம் அருகே நிகழ்ந்த சுற்றுலா பேருந்து விபத்தில் இருவர் மரணமடைந்த நிலையில் 16 பேர் காயமடைந்தனர். 

நேற்று நள்ளிரவு, ஆயிர் ஈத்தாம் அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 80.7 இல் சுற்றுலா பேருந்து இந்த விபத்து நிகழ்ந்தது

இந்தச் சம்பவத்தில் சுற்றுலா பேருந்து, வாகனங்களை இழுத்துச் செல்லும் டோ டிரக் வாகனம், கனரக லாரி ஆகியவை விபத்துக்குள்ளானதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்

சுற்றுலா பேருந்தில் பயணித்த இந்தோனேசியர்களான 43 வயதான Hidirman, 44 வயதான  Zulhadi ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக  ஆயிர் ஈத்தாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் Mohamad Shamin Mohamed Salikin தெரிவித்தார்.

அதே நேரத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 16 பேர் காயமடைந்தனர்.

மேலும் 28 பேர் காயமின்றி உயிர் பிழைத்ததாக அவர் குறிப்பிட்டார். 

இந்த விபத்த குறித்து அதிகாலை 12.44 மணிக்குத் தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் ஆயிர் ஈத்தாம் மற்றும் யோங் பெங் நிலையங்களிலிருந்து ஏழு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset