
செய்திகள் மலேசியா
மைகியோஸ்க் திட்டம் குறித்து எம்ஏசிசி விசாரணையைத் தொடங்கியுள்ளது
புத்ராஜெயா:
வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் மைகியோஸ்க் திட்டத்திற்கான டெண்டர்களை வழங்குவதில் ஊழல், முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில் எம்ஏசிசி எனப்ப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதனை எம்ஏசிசி விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குனர் ஜைனுல் தருஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
இந்த விசாரணையில், டெண்டர் செயல்பாட்டில் ஊழல் அல்லது முறைகேடு தொடர்பான ஏதேனும் கூறுகளை அடையாளம் காண்பதில் எம்ஏசிசி கவனம் செலுத்தும்.
கடந்த மே மாதம் சிலாங்கூர் மசீச இளைஞர் பிரிவு இந்த திட்ட நிதி, செயல்படுத்தல் குறித்து விசாரணை நடத்தக் கோரி ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் புகார் அளித்தது.
இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் ங்கா கோர் மிங் நிராகரித்து, கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அது தொடர்பான விசாரணையை எம்ஏசிசி தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக மைகியோஸ்க் முயற்சி பி40 குழுமம், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தரப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான, மலிவு விலையில் வர்த்தக இடங்களை வாடகைக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:32 am
நாடு முழுவதும் மின்னியல் சிகரெட்டிற்கு தடை விதியுங்கள்: பகாங் ஆட்சியாளர் நினைவுறுத்தல்
July 3, 2025, 11:05 am
தலைமை நீதிபதியின் அதிகாரங்களையும் கடமைகளையும் மலாயா தலைமை நீதிபதி நிரப்புவார்
July 3, 2025, 11:04 am
புதிய நியமனம் வரை ஹஸ்னா முஹம்மத் இடைக்காலத் தலைமை நீதிபதியாகச் செயல்படுவார்
July 3, 2025, 10:48 am
தெலுக் இந்தான்: ங்கா-வை வீழ்த்த அவருக்கு இணையான வேட்பாளர் தேவை: ஆய்வாளர் கருத்து
July 3, 2025, 9:45 am
சபா ஜிஎல்சி நிறுவனத்தின் மூத்த நிர்வாகியை எம்ஏசிசி கைது செய்தது
July 3, 2025, 9:36 am