நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொராய்ஸ் வழக்கில் கிட் சியாங் உட்பட நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் நஜிப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

கோலாலம்பூர்:

மொராய்ஸ் வழக்கில் கிட் சியாங் உட்பட நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் முகநூல் பக்க நிர்வாகி இதனை வலியுறுத்தினார்.

முன்னாள் துணை அரசு வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் கொலையில் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் தொடர்புப்படுத்தி பேசினர்.

குறிப்பாக லிம் கிட் சியாங், ஜசெக, நம்பிக்கை கூட்டணி தலைவர்கள்  கெவின் மொராய்ஸ் கொலையில் நஜிப் ரசாக்கை இணைக்க முயன்றனர்.

ஆகையால் இவர்கள் அனைவரும் முன்வந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் இது. சாக்குப்போக்குகள் இல்லாமல், தந்திரங்கள் இல்லாமல் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக  நேற்று, 10 ஆண்டுகளுக்கு முன்பு கெவின் கொலை தொடர்பாக முன்னாள் ராணுவ மருத்துவர் ஆர். குணசீகரனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை கூட்டாட்சி நீதிமன்றம் உறுதி செய்தது.

மேலும் எஸ். நிமலன், எஸ். ரவி சந்திரன் ஆகிய இருவருக்கும் முறையே 35 ஆண்டுகள், 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset