நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் 

சென்னை: 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1975ஆம் ஆண்டு வெளியான படம் தான் இதயக்கனி. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஜெகந்நாதன் இயக்கியிருந்தார். 

இதயக்கனி படம் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்திற்கு பெரிய உந்துசக்தியாக திகழ்ந்தது.

படத்தை ஆர்.எம்.வீரப்பன் திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இன்பமே உந்தன் பேர், நீங்க நல்லா இருக்கணும் போன்ற பாடல்கள் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இதயக்கனி படம் வெளியாகி 50 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து இதயக் கனி படம் மீண்டும் வருகிற 4-ந்தேதி தமிழகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

4K டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இதயக்கனி படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளதால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset