
செய்திகள் மலேசியா
பாதுகாப்பு நிபந்தனைகளை மீறியதற்காக படகு உரிமை நிறுவனத்தின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்: சுந்தர்ராஜூ
ஜார்ஜ்டவுன்:
பாதுகாப்பு நிபந்தனைகளை மீறியதற்காக படகு உரிமை நிறுவனத்தின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ எஸ். சுந்தர்ராஜூ இதனை வலியுறுத்தினார்.
கடந்த சனிக்கிழமை திராங்கானுவின் பூலாவ் பெர்ஹெந்தியானில் 15 பேர் பயணித்த படகு கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் மரணமடைந்தனர்.
இச்சம்பவத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட படகு உரிமையாளர் நிறுவனத்தின் இயக்க உரிமங்களை ரத்து செய்வது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அமலாக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.
அனைத்து சுற்றுலாப் படகு இயக்குபவர்களும் தங்கள் ஊழியர்களுக்கு படகுகளை இயக்குவதில் போதுமான பயிற்சி, தகுதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm