நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவு: மறுஆய்வு செய்ய சட்டத்துறை அலுவலகத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி

புத்ரா ஜெயா:

எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க கோரிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் கூடுதல் உத்தரவை விசாரிக்க சட்டத்துறை அலுவலகத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று ஜூலை 1-ஆம் தேதி அனுமதி வழங்கியது.

வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவைச் சட்டத்துறை அலுவலகம் மறுஆய்வு செய்வதற்கான விண்ணப்பத்திற்கு எதிராக மேற்கொண்ட இறுதி முயற்சியில்  நஜிப் தோல்வியடைந்தார்.

மலாயா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ ஹஸ்னா முகமது ஹாஷிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட கூட்டரசு நீதிமன்றக் குழு, சட்டத்துறை அலுவலகம் வாதங்களை முன்வைப்பதைத் தடுக்கும் நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்தது. 

அதுமட்டுமல்லாமல், நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவைச்  சட்டத்துறை அலுவலகம் மறு ஆய்வு செய்யலாம் என்று நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது. 

நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவு வழக்கில் புதிய ஆவணமாக இருப்பதால் நீதிமன்றம் அதை பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று நீதிபதி டான்ஸ்ரீ ஹஸ்னா தனது தீர்ப்பில் கூறினார். 

அதுமட்டுமல்லாமல், நஜிப்பின் விண்ணப்பத்திற்கு சட்டத்துறை அலுவலகம் மறுபதில் வழங்கவில்லை. அதனால் இந்த வழக்கில் முரண் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ ஹஸ்னா கூறினார். 

ஆக, வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவை உச்ச நீதிமன்றம் முழுமையாக ஆராய வேண்டும் என்று டான்ஸ்ரீ ஹஸ்னா தெரிவித்தார்.

பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்திற்கு வழிவகை செய்யும் கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 42 சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் டான்ஸ்ரீ ஹஸ்னா கூறினார். 

கடந்த ஜனவரி 6-ஆம் தேதி, Datuk Azizah Nawawi தலைமையிலான  மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு வீட்டுக் காவல் உத்தரவு தொடர்பான கூடுதல் பிரதிநிதித்துவ மனுவைச் சமர்ப்பிக்க நஜிப்பிற்கு அனுமதி வழங்கியது. 

தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி வழங்கும் முன்னாள் மாமன்னரின் கூடுதல் உத்தரவு இருப்பதாக நஜிப் கூறினார். 

2024-ஆம் ஆண்டு ஜனவரி 29 தேதியிடப்பட்ட முன்னாள் மாமன்னரின் கூடுதல் உத்தரவு இருப்பதை உறுதிப்படுத்தவும் வெளியிடவும் நஜிப் கூறினார். 

SRC இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து RM42 மில்லியன் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் நஜிப் தற்போது ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset