நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்

ஜார்ஜ்டவுன்:

இவ்வாண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள் பினாங்கில் கோலாகலமாக நடைபெறவுள்ளன.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி மலேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இவ்வாண்டுக்கான கொண்டாட்டம் அரேனா பட்டர்வொர்த்தில் பல்வேறு உற்சாகமான செயல்பாடுகளுடன் நடைபெறும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரவு 8.30 மணிக்கு கொண்டாட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த கொண்டாட்டங்களில் பினாங்கு ஆளுநர் துன் ராம்லி நாகா தாலிப், சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜி நூர், சரவா முதலமைச்சர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மலேசிய தின கொண்டாட்டங்கள் சில நேரங்களில் கடந்த ஆண்டு போல கோத்தா கினபாலு பாடாங் மெர்டேகா போன்ற திறந்தவெளிகளில் நடத்தப்படும்.

சில சமயங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரவா ச்சிங்கில் உள்ள ஸ்டேடியம் பெர்பாடுவானில் நடந்தது.

இஅந்த முறை வித்தியாசமானது என்னவென்றால், சபா, சரவா,  தீபகற்ப மலேசியா ஆகியவை மாறி மாறி மலேசிய தின கொண்டாட்டங்களை நடத்தும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இது மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், நாட்டின் மீதான அன்பையும் சொந்த உணர்வையும் வளர்க்க உதவும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset