
செய்திகள் மலேசியா
இத்தாலி, பிரான்ஸ், பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்கான அதிகாரப்பூர்வப் பயணத்தை பிரதமர் அன்வார் தொடங்கினார்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்கான தொடர் அதிகாரப்பூர்வப் பயணத்தைத் இன்று தொடங்கினார்.
பிரதமர் அன்வார் மலேசிய தூது குழுவினரோடு இன்று மாலை 2.15 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இத்தாலி புறப்பட்டார்.
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் அன்வாரின் முதல் முறை அங்குச் செல்கின்றார். .
இத்தாலிக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்துடன் தொடங்கும் பிரதமரின் இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உலக அளவில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மலேசியாவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
ரோம், பாரிஸ் மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய மூன்று முத்ன்மை பொருளாதார மையங்களுக்கான பிரதமர் அன்வாரின் வருகை அந்தந்த நாடுகளுடனான அரசத் தந்திர உறவுகளையும் வர்த்தக உறவுகளையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த மூன்று நாடுகளும் கடந்த ஆண்டு RM50.91 பில்லியன்மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகத்தைப் பதிவு செய்தன.
இந்தப் பயணம் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இத்தாலிக்கான மலேசிய தூதர் டத்தோ ஜாஹித் ரஸ்தாம் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm