நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை: ஹிஷாமுடின்

கோலாலம்பூர்:

அம்னோவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை.

அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் இதனை சூசகமாக தெரிவித்தார்.

கட்சியால் தனது உறுப்பினர் இடைநீக்கத்தை அகற்ற கோரி நான் மேல்முறையீடு செய்யப் போவதில்லை.

இந்த முடிவில் நான் உறுதியாக உள்ளேன். கொள்கை அடிப்படையில் அவ்வாறு செய்ய நான் விரும்பவில்லை

கடந்த 2023 ஜனவரி மாதம் என்னை இடைநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் இந்த இடை நீக்க நடவடிக்கையில் நீதி இல்லை. என்னுடைய விளக்கம் கோரப்படவில்லை.

அதன் அடிப்படையில் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset