நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்

பட்டர்வொர்த்:

பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் ஒருவர்  உயிர் தப்பினார்.

இந்த சம்பவம்  இன்று மாலை இங்குள்ள சுங்கை நியோர் தேசிய பள்ளிக்கு முன் மாலை சுமார் 5.40 மணியளவில் நிகழ்ந்தது.

40 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்ட ஆடவர் தனது மகன் பள்ளியிலிருந்து திரும்புவதற்காகக் காத்திருந்ததாகத் தெரிகிறது.

அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் வந்து காரின் ஓட்டுநரின் பக்கம் உள்ள கண்ணாடியில் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றார்.

இந்த சம்பவத்தில் காரில் இருந்த ஆடவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸ் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானன.

சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset