
செய்திகள் மலேசியா
மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் பயன்படுத்திய கால்பந்து உபகரணப் பொருட்கள் லெமோய் ஆரம்பப் பள்ளிக்கு உதவியாக வழங்கப்பட்டது: கிறிஸ்டபர் ராஜ்
கோலாலம்பூர்:
மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் பயன்படுத்திய கால்பந்து உபகரணப் பொருட்கள் லெமோய் ஆரம்பப் பள்ளிக்கு உதவியாக வழங்கப்பட்டது.
செக்கினா பிஆர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கிறிஸ்டபர் ராஜ் இதனை கூறினார்.
ஆசிய சுற்றுப் பயணத்தின் ஓர் அங்கமாக மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் மலேசியா வந்திருந்தனர்.
இந்த வருகையின் போது மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் ஆசியான் ஆல் ஸ்டார் அணியை சந்தித்து விளையாடினர்.
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை புரோ இவெண்ட்ஸ் நிறுவனமும் செக்கினா பிஆர் நிறுவனமும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் பயன்படுத்திய கால்பந்து உபகரண பொருட்கள் இப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.
செக்கினா பிஆர் முயற்சியின் வாயிலாக அப்பள்ளிக்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டது.
இப்பள்ளி மாணவர்களுக்கு 15 கால்பந்து காலணிகள், கால்பந்துகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
ஓராங் அஸ்லி எனப்படும் பூர்வக்குடி சமூகத்தில் கால்பந்து வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
பகாங் கேமரன்மலையில் உள்ள பூர்வக்குடி குழந்தைகளுக்கான கிராமப்புறப் பள்ளியாக லுமோய் பள்ளி விளங்குகிறது.
இப்பள்ளி தி போடாக்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு கால்பந்து அணியைக் கொண்டுள்ளது.
இம்மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
தலைநகரில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு எளிய ஆனால் அர்த்தமுள்ள இரவு விருந்தில் இப்பொருட்களை வழங்கிய பின் கிறிஸ்டபர் ராஜ் இவ்வாறு கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm