நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்

ஷாஆலம்:

பல்கலைக்கழக மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கிற்கு  48 மணி நேரத்திற்குள் தீர்வு காணப்பட்டது.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை தெரிவித்தார்.

சைபர்ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவியை கொன்றதாக சந்தேகிக்கப்படும் முக்கிய சந்தேக நபர்,

கடந்த வாரம் தனது காதலியுடன் பலமுறை அந்த வீட்டில் இரவைக் கழித்ததாக நம்பப்படுகிறது.

விசாரணைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவரின் வீட்டுத் தோழியும் முக்கிய சந்தேக நபரின் காதலியுமான அப்பெண் சம்பவத்திற்கு முன்பு அந்த நபருக்கு சம்பந்தப்பட்ட வீட்டில் வசிப்பதற்கான அணுகல் அட்டை, வீட்டு சாவியையும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் சம்பந்தப்பட்ட வீட்டில் தனியாக வசித்து வந்த பாதிக்கப்பட்டவர் மீதான தவறாக நடவடிக்கையே  இந்த கொலை வழக்கு என்று போலிசார் கண்டறிந்தனர். 

குறிப்பாக சந்தேக நபருக்கு பாதிக்கப்பட்டவர் மீது தீய எண்ணம் இருந்தது என்பதும் கண்டறியப்பட்டது.

குறிப்பாக தேர்வு காலம் முடிந்து வீடு திரும்பிய போது காதலி கொடுத்த அணுகல் அட்டை, சாவியுடன் சந்தேக நபர் அந்த வீட்டிற்குள் இருந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் தீய நோக்கங்களைக் கொண்ட சந்தேக நபர், 

பாதிக்கப்பட்டவரை ஒரு பொருளால் தாக்கி அவரது மரணத்திற்குக் காரணமாகி உள்ளார்.

மேலும்  அந்த சந்தேக நபர் கொள்ளையடித்தும் சென்றுள்ளார்.

ஆக மொத்தத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியில் வழக்கு 48 மணி நேரத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset