
செய்திகள் மலேசியா
எதிர்காலத்தில் எரிவாயு குழாய் தீ விபத்துகளைத் தடுக்க புதிய சட்ட கொள்கை கட்டமைப்பு உருவாக்கப்படும்: அமிருடின் ஷாரி
ஷா ஆலம் :
எதிர்காலத்தில் எரிவாயு குழாய் தீ விபத்துகளைத் தடுக்க சிலாங்கூரில் புதிய சட்ட கொள்கை கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
அரசாங்கம் சட்ட மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட ஒரு சிறப்பு பணிக்குழு புதிய சட்ட கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
இந்தச் சிறப்பு பணிக்குழு சட்ட அடிப்படையிலான அமைப்புகளை ஆய்வு செய்யும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm